சினிமா

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிலம்பரசன்- சுசீந்திரன் கூட்டணியில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கலன்று வெளியாகியுள்ள படம் ‘ஈஸ்வரன்’. முன்னதாக இப்பட ரிலீஸுக்கு ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் பிரச்சினையை முன்வைத்து, இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு பல்வேறு சிக்கல் ஏற்பட்டது.

இறுதியில் தயாரிப்பாளர் பாலாஜி கப்பா தலையீட்டிற்கு பிறகு படம் ஒரு வழியாக சொன்ன தேதியில் வெளியானது. இந்நிலையில் திடீரென்று தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்பு படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து இப்பட தயாரிப்பாளர் பாலாஜி கப்பா அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதில், “ஈஸ்வரன் படம் சம்பந்தமாக எங்கள் தரப்பில் அளித்த கோரிக்கையைத் தமிழ்த் திரைப்பட சங்கம் ஏற்றுப் படத்தை வெளியிட ஒப்புதல் அளித்தது. மேற்கண்ட படத்தினை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஒத்துழைப்பு தராத சிம்புவிற்கு நீங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Share
ALSO READ  செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் துவக்கம்..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸ்விமிங் போட்டோஸ் வெளியிட்ட ப்ரணிதா.

naveen santhakumar

கேரளாவை கலக்கும் தமிழ் கிராமிய பாடல்…..

naveen santhakumar

ட்விட்டரில் திடீரென ட்ரெண்டாகும் சிம்பு என்ன காரணம்?

Admin