இந்தியா

தேஜஸ் ஸ்லீப்பர் இரயில்; மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பயண அனுபவத்தை உயர்த்தும் நோக்கில் இரயில்வே அமைச்சகம் தேஜஸ் ஸ்லீப்பர் இரயில்களை அறிமுகப்படுத்துகிறது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு மாற்று இரயிலாக தேஜஸ் இரயில் செயல்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் பிப்ரவரி 15 முதல் இந்த இரயில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் இதுபோன்ற 500 தேஜஸ் இரயில்களை உருவாக்கும் பணியில் இரயில்வே தொழிற்சாலை ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேஜஸ் இரயில்கள் மூலம் இரயில் பயண அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பணியில் இரயில்வே துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

முழுவதும் நவீன முறையில் தயாரிக்கப்பட்ட இந்த இரயிலில் நவீன கழிப்பறை, மொபைல் சார்ஜ் வசதிகள், நவீன இருக்கைகள், தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமராக்கள் என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது. மேலும் விரைவில் துரு பிடிக்காமல் இருக்க பெட்டிகள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் உருவாக்கப்படுகிறது. இதனால் சாமானிய பயணிகள் கூட  குறைந்த விலையில் வசதியான பயணத்தை அனுபவிக்க முடியும். 


Share
ALSO READ  பாமகவுடன் எந்த இழுபறியும் இல்லை; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜனநாயகம் வென்றுள்ளது – ராகுல் காந்தி பேச்சு!

Shanthi

தாய்க்கு கொரோனா… மூன்று மாத குழந்தைக்கு பால் கொடுத்து கவனித்து வரும் செவிலியர்கள் நிகழ்ச்சி வீடியோ…

naveen santhakumar

அரபிக்கடல் ஆழத்திற்கு சென்று சல்யூட் அடித்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா…

Admin