சினிமா

ஜிவி பிரகாஷ் படத்தில் நடிகர் தனுஷ்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அந்த படம் வெளியாகி அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து பல்வேறு படங்களில் நடிகராக நடித்துவருகிறார். அந்தவகையில்   ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’, ‘ஜெயில்’ ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. 

இந்நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் ராஜேஷுடன் கைக்கோர்த்துள்ளார். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில்  ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சன் என்டர்டைன்ட்மென்ட்  நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இப்பாடல் மற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  பயந்துள்ள குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்; நடிகை குஷ்பூ !



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல நடிகரின் மகளுடன் நடிக்கும் உதயநிதி !

News Editor

மீண்டும் ஸ்லிம்மாக காட்சியளிக்கும் சமந்தா.. அட்டகாசமான போட்டோ..

News Editor

ஒரு வாரத்திற்கு பிக்பாஸில் இவ்வளவு சம்பளமா.? பிரியங்காவை மிஞ்சிய இவர் – முழு விபரங்கள்!

naveen santhakumar