சினிமா

வலிமை எந்த மாதிரியான படம்; அப்டேட் கொடுத்த போனி கபூர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஜித், ஹெச்.வினோத், இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வலிமை. இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர்  தயாரித்து வருகிறார்.  மேலும் இவர்கள்  கூட்டணியில் “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் மீண்டும் இவர்கள் கூட்டணி இணைந்துள்ளதால் “வலிமை” படத்தின் மீது கூடுதல் எதிர்பார்புகள் எழுந்துள்ளது. 

ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் ‘வலிமை’என்பதைத் தவிர படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகளை முடித்துள்ளது படக்குழு.  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் போனி கபூரிடம் எந்த வகையிலான திரைப்படமாக ‘வலிமை’ இருக்கும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த போனி கபூர், “அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த, குடும்பப் பின்னணி கொண்ட திரைப்படமாக ‘வலிமை’ இருக்கும். இப்படத்திற்காக அஜித் கடினமாக உழைத்தார். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் திருப்திகரமான படமாகவும் இருக்கும்” எனக் கூறினார்.

ALSO READ  கொரோனா தடுப்பூசிக்கு ரூபாய் 35,000 கோடி ஒதுக்கீடு; மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு !

#valimai #ajith #thala #boneykappor #tamilcinema #tamilnadu #cinema #tamilmovie #cinematrending #Hvinoth #ajithukumar #valimai #valimaiupdate #balimaifirstlook #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிறுவனின் கல்வி கட்டணத்தை முழுமையாக ஏற்ற நடிகர் அஜித்..!

News Editor

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து …!

naveen santhakumar

காவல்துறையைப் பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன்: இயக்குநர் ஹரி… 

naveen santhakumar