இந்தியா

கொரோனா தடுப்பூசிக்கு ரூபாய் 35,000 கோடி ஒதுக்கீடு; மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.முன்னெப்போதும் இல்லாத வகையில் காகிதம் இன்றி மின்னணு டிஜிட்டல் முறையிலான “ஸ்மார்ட் பட்ஜெட்” நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனையடுத்து பேசிய அவர் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை கூறினார். 

  • இந்தியா முழுவதும் ஊட்டச்சத்தை மேம்படுத்த ( ஊட்டச்சத்து இயக்கம் 2.0) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
  • 1.41 லட்சம் கோடி ரூபாயில்  நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 
  • கொரோனா  தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூபாய் 35,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்.
  • சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த பழைய வாகனங்களைத் திரும்பப் பெறும் கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.
  • பழைய மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டை தடுத்து, அதன் மூலம் காற்று மாசைக் குறைக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 
  • சுயசார்பு சுகாதாரத் திட்டத்திற்கு ரூபாய் 64,180 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூபாய் 1.41 லட்சம் கோடியில் நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நீர்வளத்துறையில் ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • பல விமான நிலையங்களில் பராமரிப்பு பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். 
  • ஜவுளித்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மிகப்பெரிய முதலீட்டுப் பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும். மூன்று ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கப்படும். அரசின் சொத்துக்கள் மூலம் வருவாயை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
ALSO READ  ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா செல்லும் தனுஷ்!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கட்சியில் சேர்ந்த 8 வது நாளே முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் அறிவிப்பு !

News Editor

مراهنات كرة القدم اون لاين أفضل مواقع مراهنات رياضي

Shobika

துவங்கியது தென்மேற்கு பருவமழை…!

naveen santhakumar