சினிமா

நேரடி இந்தி சினிமாவில் சாய் பல்லவி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரேமம் பட புகழ் சாய் பல்லவி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழிலும் தனுஷ்  சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, அதன் பின்னர் மலையாளத்தில் பிரேமம் படத்தில்  மலர் டீச்சராக அறிமுகமாகி அனைவரின் மனங்களையும் கவர்ந்தார் சாய் பல்லவி. அதனையடுத்து இவர் தமிழில் கடைசியாக பாவக்கதைகளில் வெற்றிமாறன் இயக்கியுள்ள  அந்தாலஜி என்ற ஒரு பகுதியில் சாய் பல்லவி நடித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி இந்தியில் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘சத்ரபதி’ படத்தை தற்போது இந்தியில் வி.வி. விநாயக்  இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார்.

ALSO READ  அறுவை சிகிச்சை முடிந்து வீல்சேரில் வீடு திரும்பிய அர்ச்சனா…!

இதில் ஸ்ரேயா கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தக்வல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீடியோ வெளியிட்ட நதியா; மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

News Editor

என் இளமைக்கு இதுதான் காரணம் ரஜினிகாந்த் பேச்சு

Admin

சல்மான் கான் வெளியிட்ட அறிக்கை…அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்!

News Editor