தமிழகம்

ஜன- 9 முதல் 11 வரை தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டம் அலங்காரத்தட்டு பகுதியில் 10.01.2020 அன்று தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் சி. பசுபதிபாண்டியனின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் 09.01.2020 மாலை 6.00 மணி முதல் 11.01.2020 காலை 6.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  நான் அரசியலுக்கு கட்டாயம்  வருவேன் : நடிகர் பார்த்திபன் 

இத்தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது.மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு கையில் இருக்கும் தடுப்பூசிகளை செலுத்தாமல் மேலும் தடுப்பூசி கேட்கிறது; பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு ! 

News Editor

‘பப்ஜி’ மதன் கைது- சிபிசிஐடி அதிரடி…!

naveen santhakumar

மாணவர்களை தாக்கும் கொரோனா… 46 பேருக்கு தொற்று உறுதி!

naveen santhakumar