தமிழகம்

கருணாநிதி பிறந்தநாள்: முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 97வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசின் சார்பிலும் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக தென்சென்னையில் 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ALSO READ  எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் உத்தரவு!

மேலும், இந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையானது சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் நிறுவப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் உலர்களங்கள் அமைக்கப்படும் என்றும் அனைத்து காவலர்களுக்கும் ரூ.5000 ஊக்கத்தொகை, திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

ALSO READ  ஜூலை 18- தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு: ஸ்டாலின் அறிவிப்பு

மேலும், மதுரையில் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறித்துள்ளார்.


முன்னதாக ஏற்கனவே மகளிருக்கு அரசு பேருந்தில் பயணிகள் கட்டணமும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாதவிடாய் காலத்தில்பெண்களை ஊருக்குள் அனுமதிக்காத கிராமம்….

naveen santhakumar

காதணி விழா தகராறில் கணவன், மனைவி இறப்பு !

News Editor

3 மாத வாடகை ரூ.4.20 லட்சம் வேண்டாம்:வணிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மனிதநேய மருத்துவர்..

naveen santhakumar