தமிழகம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000- விரைவில் அறிவிப்பு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Junior Vikatan - 28 March 2021 - விஐபி தொகுதி: ஆத்தூர்... பெரியசாமிக்குப்  பிரச்னை இல்லை! | I periyasamy winning-status-in-assembly-election

சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அளித்தது.

அதில், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக மக்களின் குறைகள் 100 நாள்களில் தீர்க்கப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் உறுதியளித்தார். மக்களிடம் இருந்து புகார் மனுக்களையும் பெற்றார்.

தி.மு.க அரசு பதிவேற்றதும் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி அதற்கான சிறப்பு அதிகாரி ஒருவரையும் நியமித்துள்ளார்.

ALSO READ  அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் அதிகரிப்பு - அரசாணை வெளியீடு!

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி,

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முதல்வர் முக ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மக்களின் நலன் கருதி கொரோனா பேரிடர் காலத்திற்கு உதவியாக, 4,000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ALSO READ  தியேட்டர்கள் திறக்க தடை: ரசிகர்கள் ஏமாற்றம்!

அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும். அதற்கான அரசாணையும் சீக்கிரமாக வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

9 மாவட்டங்களுக்கு தலைவர்கள் – இன்று மறைமுக தேர்தல்

naveen santhakumar

திமுக பிரமுகரிடம் கொல்லையடித்த மர்ம நபர் கைது !

News Editor

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ..

naveen santhakumar