தமிழகம்

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

புதிய மின்சார திட்டம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தப் புதிய மின்சார திட்டமானது மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது. இது ஏற்கனவே உள்ள மின்சார சட்டத்தின் வரம்புகளையும் திட்டம் உள்ளது. மேலும் இது பொதுமக்களுக்கும், மாநில அரசின் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது.

ALSO READ  நாளையோடு டாட்டா… வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் பரபரப்பு அறிவிப்பு!

இந்த முறையில் நேரடியாக மானியம் செலுத்துவதிலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான வரைவுச் சட்டம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. 21 நாட்களுக்குள் இது தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு கூறியிருந்தது. 

ALSO READ  சேலம் ஆட்சியரின் மனிதாபிமான நடவடிக்கையால் கொரோனா தொற்று உள்ள பெண்ணுக்கு திருமணம்.. 

மின்துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கவே இந்தத் திருத்தங்களைக் கொண்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தச் சட்டத்தில் சொல்லப்படும் பல திருத்தங்கள் சர்ச்சைக்குரியவை என்கிறார்கள் மின்சாரதுறையை சேர்ந்தவர்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக..

Shanthi

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.1லிருந்து பள்ளிகள் திறப்பு..!

Admin

தமிழகத்தில் “இல்லம் தேடி கல்வி திட்டம் ” தொடக்கம்..!

naveen santhakumar