இந்தியா

லடாக் எல்லையில் கூடுதலாக 50 ஆயிரம் வீரர்கள் குவித்துள்ள இந்தியா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லடாக் :-

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு லடாக் பகுதியில் இந்தோ-சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்தியா, சீனா படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய, சீன எல்லை பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது.

India deploys another 50,000 troops along China border

இதனை தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எல்லையில் படைகள் ஓரளவு திரும்ப பெறப்பட்டன. எனினும், சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் அவ்வப்போது பதற்றம் நிலவுவதால் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை.

கடந்த 1962ம் ஆண்டு போருக்குப் பிறகு, பாகிஸ்தான் எல்லையில் அதிக கவனம் செலுத்தி வந்த இந்தியா தற்போது சீன எல்லையில் தனது படைகளை குவித்து வருகிறது.

ALSO READ  கோவிட் 3வது அலை அக்டோபரில் உச்சம்: அலட்சியம் வேண்டாம்!

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சமீபத்தில் கூடுதலாக 50,000 வீரர்கள் சீன எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இமாச்சல், அருணாச்சல பிரதேசம் என அனைத்து ஒட்டுமொத்தமாக சீன எல்லைகளில் 2 லட்சம் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 40 சதவீதம் அதிகமாகும். இதுமட்டுமின்றி, அதிநவீன ஹெலிகாப்டர்கள் சீன எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டள்ளன. எம்777 பீரங்கிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

A China-India war would be Xi Jinping's historical mistake | Asia News

சமீபத்தில் பிரான்சிடமிருந்து வாங்கப்பட்ட அதிநவீன ரபெல் போர் விமானப் படையும் லடாக்கில் அமைக்கப்பட்டு சீன எல்லை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தைப் போலவே சீனாவும் அதன் எல்லையை ஒட்டி ராணுவத்தை குவித்து வைத்துள்ளது.

லடாக் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 2ம் நாளான நேற்று வீரர்களிடையே உரையாடினார்.

ALSO READ  ஊரடங்கால் வருமானமின்றி தவித்த கூலித்தொழிலாளி தற்கொலை....

அவர் கூறுகையில்,

கடந்த ஆண்டு இங்கே கடுமையான சவாலை சந்தித்தோம். ஆனாலும் நமது வீரர்கள் தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் அதை கையாண்டார்கள். நமது ராணுவம் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்பதை உலகம் உணர்ந்தது.

நாம் எப்போதும் அமைதிக்காக உழைக்கிறோம். யாரையும் நாம் தாக்கியதில்லை. இன்னொருவருக்கு எதிரானதாக நம் வெற்றி இருக்கக் கூடாது என்பதை நோக்கமாகவும் கொண்டுள்ளோம்.

அதேவேளையில் நம் அமைதிப்போக்கை தவறாகப் பயன்படுத்தினால் தகுந்த பதிலடி கொடுக்க இந்தியா தயாராகவே உள்ளது. இந்தியா எந்த ஆக்கிரமிப்புக்கும் இடமளிக்காது. எந்தவொரு சவாலுக்கும் உரிய பதிலடி கொடுக்கத் தயார் நிலையிலேயே உள்ளோம் என்றார்.

இதனிடையே, சீன ராணுவமும் கூடுதலான படையினரை திபெத்தில் இருந்து ஜிங்ஜியாங் ராணுவ தளத்துக்கு அனுப்பியுள்ளது.

மேலும், போர் விமானங்கள், நீண்ட தூரம் தாக்கும் பீரங்கிகள் போன்றவற்றையும் எல்லைப் பகுதியில் சீனா நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வேகமெடுக்கும் ஒமைக்ரான்… 10 மாநிலங்களுக்கு அதிரடி நடவடிக்கை!

naveen santhakumar

ராஜஸ்தானில் கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 3 முதியவர்கள்.. பயன்படுத்திய மருந்துகள் என்ன??மருத்துவர்களுக்கு முதல்வர் பாராட்டு….

naveen santhakumar

பேராசிரியர் சாலமன் பாப்பையா, தமிழக வீராங்னை அனிதா மறைந்த பின்னணி பாடகர் எஸ் .பி . பாலசுப்ரமணியம் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகள் வழங்கினார்

News Editor