இந்தியா

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் காலமானார்- பிரபலங்கள் இரங்கல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் (98) இன்று காலமானார்.

Dilip Kumar admitted to ICU after complaining of breathlessness - Movies  News

திலீப் குமார் கடந்த ஜூன் 30ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் காரணமாக மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 7) காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி திலீப் குமார் காலமானார். இந்த தகவலை திலீப் குமாரின் மருத்துவர் ஜலீல் பார்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

யூசுப் கான் என்ற இயற்பெயரைக் கொண்ட திலீப் குமார் 1944-ம் ஆண்டில் நடிகராக அறிமுகமாகி, 1950,60களில் பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.

ALSO READ  தனியார் நிறுவனங்கள் பயணிகள் ரயில் கட்டணங்களை தங்கள் விருப்பம் போல் இனி நிர்ணயிக்கலாம்- ரயில்வே வாரியம்.
Dilip Kumar: Tragedy King of Bollywood and his rare interview from 1970

அவரது நடிப்பில் வெளியான ‘தேவ்தாஸ்’, ‘மொகல்-இ-அஸாம்’, ‘கங்கா ஜமுனா’ உள்ளிட்ட படங்கள் இன்றும் பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை.

Dilip Kumar house in Pakistan: REVEALED! Why owner wants whopping Rs 25  crores not Rs 85 lakhs | Zee Business

50 ஆண்டுகளில் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள திலீப் குமார் இறுதியாக 1998ஆம் ஆண்டு வெளியான ‘கிலா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

ALSO READ  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவுநாள்

இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994-ம் ஆண்டில் திலீப் குமாருக்கு வழங்கப்பட்டது.

மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார்.

திலீப் குமாரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து..

Shanthi

Site Oficial De Apostas E Online Cassino No Brasi

Shobika

தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கவில்லை – எய்ம்ஸ்…! 

naveen santhakumar