இந்தியா

விடுதலை போராட்ட வீரர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட தேச துரோக சட்டம் இன்னும் தேவையா ?: உச்சநீதிமன்றம் கேள்வி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி :

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சுதத்திர போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களை அடக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் இன்னும் தேவையா ? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஓய்வு பற்ற மேஜர் எஸ்.ஜி.ஓம்பட்கேர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

ALSO READ  மனைவியை விவாகரத்து செய்தாலும் குழந்தைகளை பராமரிக்கும் கடமை தந்தைக்கு உள்ளது-உச்ச நீதிமன்றம்
Jatin Verma's IAS Academy | 8882932364 | Jatin Verma, Best IAS Coaching in  Karol Bagh, IAS Coaching in Karol Bagh, Classroom Courses for IAS Coaching  in Karol Bagh, Foundation Batches for IAS

அதில் தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்ய வழிவகுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ஏ-வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட தேச துரோக சட்டம், விடுதலை பெற்ற பின்னரும் தேவைப்படுகிறதா? இந்த தேசத் துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா ? என்றும் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு கடைப்பிடிப்பது ஏன் ? என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: இஸ்லாமிய வழக்கறிஞருக்கு முதல் அழைப்பிதழ்… 

naveen santhakumar

ஆந்திராவில் புதிய திட்டம்…வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் !

News Editor

ட்ரம்ப் திறந்து வைக்கும் உலகின் பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கம்…!!!!!

naveen santhakumar