இந்தியா விளையாட்டு

ட்ரம்ப் திறந்து வைக்கும் உலகின் பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கம்…!!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஹமதாபாத்,

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அஹமதாபாத் நகரிலுள்ள மொடேரா விளையாட்டு அரங்கை திறந்து வைத்து ‘நமஸ்தே ட்ரம்ப்’ என்ற நிகழ்ச்சியில் பற்கேற்கிறார்.

சரி, ட்ரம்ப் திறந்து வைக்கும் அஹமதாபாத் மொடேரா மைதானத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்று பார்ப்போம்.

மொட்டேரா மைதானம் டாப் 10 அம்சங்கள்..

1. இந்த மைதானம் சுமார் 1,10,000 பேர் அமர கூடியது. இதுவரை ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானம் (95,000 பேர் அமரும் வசதி) தான் உலகின் மிகப் பெரிய மைதானமாக கருதப்பட்டு வந்தது. 

தற்போதைக்கு இந்தியாவின் பெரிய விளையாட்டு அரங்கான கொல்கத்தா ‘ஈடன் கார்டனில்’ 62,000 பேர் வரை அமரலாம்.

இதற்கு முன் 49,000 பேர் அமரும் வகையிலான மைதானத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் இந்த பிரம்மாண்ட மைதானம் கட்டப்பட்டுள்ளது.

ALSO READ  குழந்தைக்காக ஒரே வாரத்தில் 2 பெண்கள் நரபலி - திடுக் சம்பவம்; தம்பதி கைது!

2. ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனத்தால் இந்த பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. பழைய மோடேரா மைதானம் பல சாதனைகளை உள்ளடக்கியதாகும். 

சுனில் கவாஸ்வர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்தது இந்த மைதானத்தில் தான். 

கபில் தேவ், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை (431 விக்கெட்கள்) வீழ்த்திய சாதனையை படைத்ததும் இதே மைதானத்தில் தான்.

3. புதிதாக கட்டப்பட்டுள்ள மோடேரா மைதானத்தில் 75 குளிர்சாதன வசதி கொண்ட கார்ப்பரேட் பாக்ஸ் உள்ளது.

4. 55 அறைகள், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகள், உணவகங்கள், ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளங்கள், ஜிம்னாஸ்டிக் கூடம், 3 D புரோஜெக்டர் தியேட்டர் ஆகியன உள்ளன.

5. ஃபுட் கோர்ட், மருத்துவ வசதி பகுதி ஆகியன உள்ளன.

ALSO READ  உருமாறிய கொரோனா வைரஸால் பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து...!

6. கிரிக்கெட் அகாடமி அறைகள் மற்றும் உள்விளையாட்டு பயிற்சி கூடங்கள் உள்ளன.

7. பெவிலியன், உயர் தொழில்நுட்ப வசதி கொண்ட மீடியா பாக்ஸ், எல்.இ.டி விளக்குகள் வசதிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

8. இந்த மைதானத்தில் 3000 கார்கள், 10,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வசதி கொண்ட மிகப் பெரிய வாகன நிறுத்தப் பகுதி உள்ளது.

9. இந்த மைதானத்தில் கிரிக்கெட் மைதானத்துடன் கூடுதலாக கால்பந்து, ஹாக்கி மைதானங்களும், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, டென்னிஸ், ஓட்டப் போட்டி உள்ளிட்ட பல விளையாட்டு அரங்க வசதிகளும் உள்ளன.

10. இந்த மைதானம் அஹமதாபாத் மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளது. தனி வாகனங்களில் செல்ல விரும்பாதவர்கள், மெட்ரோவை பயன்படுத்திக் கொள்ளலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உசேன் போல்டை மிஞ்சிய கர்நாடக வீரருக்கு ஒலிம்பிக்கில் சேர பயிற்சி.. மத்திய அரசு திட்டம்..

naveen santhakumar

Rəsmi 1xbet Casino Azerbaycan Bukmeker kontor

Shobika

Odkryj Emocje Związane Unces Grami Onlin

Shobika