இந்தியா

கட்டுன புடவையோட வந்தா போதும்- திருமணம் முடிந்ததும் மணப்பெண் அணிந்திருந்த நகைகளை பெண் வீட்டாரிடம் ஒப்படைத்த மணமகன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:-

கேரளாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று மனைவி நகைகளை திருப்பி கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

No gold please', Alappuzha youth declares anti-dowry statement on wedding  day | Kerala youth refuses to accept gold from bride's family| anti-dowry  statement

படித்தவர்கள் நிறைந்த மாநிலம் என கூறப்படும் கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தது. வரதட்சணை கொடுமை அடுத்தடுத்து பெண்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு வரதட்சணை விவகாரம் புயலை கிளப்பியது.

வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதமும் இருந்தார்.

இந்நிலையில், வாலிபர் ஒருவர் கேரளாவில் வரதட்சணை மறுப்பு திருமணத்தை நடத்தி காட்டினார்.

ALSO READ  ஜிகா வைரஸ் என்றால் என்ன? எப்படி பரவுகிறது ?

ஆலப்புழை மாவட்டம் நூரநாடு பகுதியை சேர்ந்த நாதஸ்வர இசைக்கலைஞர் சதீஷ் (வயது 28). இவருக்கும் ஆலப்புழையை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுருதிக்கும் (21) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயத்தின் போதே தனக்கு வரதட்சணை வேண்டாம் என சதீஷ் கூறி இருந்தார்.

‛மாப்பிள்ளை நான் யோக்கியன் தான்... நீங்க செஞ்ச பாக்கியம் தான்...’ வரதட்சணையை மறுத்த மணமகன்!

இந்நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. இதற்காக மணப்பெண் சுருதி தனது பெற்றோர் சீதனமாக கொடுத்த 50 பவுன் நகைகளை அணிந்து மணமேடைக்கு வந்திருந்தார்.

இதை கண்ட மணமகன் சதீஷ், தனது கொள்கையே வரதட்சணை வாங்க கூடாது என்பது தான் என மணமகளிடம் தெரிவித்தார். மேலும், விருப்பம் எனில் 2 வளையல்களை மட்டும் அணிந்து விட்டு மீதி நகைகளை கழற்றி பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ALSO READ  கோவில் பிரச்சனைகளில் மாநில அரசு தலையிடக்கூடாது; அமித்ஷா !

இதையடுத்து தாலி கட்டியவுடன் மணமகள் கழுத்தில் கிடந்த நகைகள் கோவில் பூசாரி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்டிய தாலியுடன் மணப்பெண் சுருதியை மனைவியாக ஏற்று கொண்ட மணமகன் சதீஷின் செயலை அனைவரும் பாராட்டினர். சமூக வலைதளத்திலும் இவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“ставки На Спорт Онлайн Букмекерские Ставки в Футбол На день Прогнозы На Спорт Сделать Live Ставку На Спорт на Сайте Б

Shobika

1xBet 1хБет скачать на Андроид Приложение 1xbet Android apk бесплатн

Shobika

அக்டோபர் 1 முதல் புதிய அமர்வுகள் தொடக்கம் – யுஜிசி வழிகாட்டுதல்கள் வெளியீடு!!

naveen santhakumar