இந்தியா

நாடு முழுவதும் பள்ளிகளை திறக்கலாம் -ICMR…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:-

குழந்தைகளிடம் பெரியவர்களை போலவே ஆன்டிபாடிகள் அளவு உருவாக்கியுள்ளதால் முதலில் துவக்கப் பள்ளிகளை திறக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கருத்த தெரிவித்துள்ளது.

Kids can handle viral infection better; wise to consider reopening primary  schools first: ICMR

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க ஆயத்தமான நிலையில் கொரோனா 2வது அலை நாடு முழுவதும் பரவியது. இதனால் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதனிடையே, 3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என தகவல்கள் வெளிவந்தநிலையில், குழந்தைகளை தாக்கும் என்பதற்கான எந்தவித சாத்தியக்கூறுகளும் இல்லை என மருத்துவ வல்லுநர்கள் மறுத்துள்ளனர்.

ALSO READ  தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா சுகாதார அமைச்சக கூட்டத்தில் பேசியதாவது,

latest tamil news

பெரியவர்களை விட குழந்தைகள் மிகவும் திறம்பட வைரஸ் தொற்றுகளை கையாள முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 4வது தேசிய செரோ ஆய்வில், குழந்தைகளிடம் பெரியவர்களை போலவே ஆன்டிபாடிகள் அளவை உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ALSO READ  டிசம்பர் மாதம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…. 

தற்போதைய சூழலில், முதலில் துவக்கப் பள்ளிகளை திறப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். பள்ளிகளில் உதவி பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும். சில ஐரோப்பிய நாடுகளில், துவக்கப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் முதல்வர் சஞ்சமன் லிம்பூ காலமானார்:

naveen santhakumar

மேலும் உ.பி.யில் பயங்கரம்…….ஒருதலைக்காதலால் நேர்ந்த விபரீதம்:

naveen santhakumar

இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு???

naveen santhakumar