சினிமா

நயன்தாரா ரசிகர்களுக்கு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட விக்னேஷ் சிவன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘அவள்’ படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள இதில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார்.

ALSO READ  'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!
Nayanthara starrer Netrikann may opt for direct-OTT release: report -  Hindustan Times

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்நிலையில், நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக OTT-யில் ரிலீசாக உள்ளதாக விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் OTT ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த திடீர் அறிவிப்பால் நயன்தாரா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக நடிகை நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படமும் நேரடியாக OTT-யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராகவா லாரன்ஸ் படத்தில் மீண்டும் இணையும் பிரபல நடிகர்..!

News Editor

தீபாவளிக்கு மாநாடு ரிலீஸ் இல்லை! தயாரிப்பாளர் அறிவிப்பு!

naveen santhakumar

கொரோனா நிவாரண நிதி நடிகர் அஜித் 1.25 கோடி….

naveen santhakumar