சினிமா

‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் தனுஷ் நடிக்கும் `கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்கு உரிய அனுமதிகளைப் பெற்று அதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரிடம் படக்குழுவினர் சமர்ப்பித்தனர்.

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் நடிகர் தனுஷ் நடிக்கும் `கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த படப்பிடிப்பை நடத்துவதற்கு படக்குழுவினர் முறையான அனுமதி பெறவில்லை என்பது குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார்.

அதன்படி படப்பிடிப்பும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதற்கு உரிய அனுமதிகளைப் பெற்று அதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரிடம் படக்குழுவினர் சமர்ப்பித்தனர். இதனையடுத்து ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை முதல் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.


Share
ALSO READ  விஜய் ஆண்டனின்  படத்தின் சிங்கள் பாடல் வெளியீடு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் வெளியீட்டில் தள்ளிப்போகும் காட்டேரி படம்…!

News Editor

வைரமுத்துவை எதிர்க்கும் மலையாள சினிமா; விருது வழங்குவதை மறுபரிசீலனை செய்கிறது  ஓ.என்.வி. அகாடமி !

News Editor

‘ஒளியாய் வாழ்வாய் இனி நீ’ கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் !

News Editor