இந்தியா

கொரானா தொற்று சூழலில் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரானா தொற்று காரணமாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தி இருந்தார்கள்.

இந்த சூழலை பயன்படுத்தி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகவலை பச்சன் பச்சோ அந்தோலன் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஆவார். இவர் குழந்தைகள் உரிமைக்காக பச்சன் பச்சோ அந்தோலன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

ALSO READ  அனைத்து காவல் நிலையங்களிலும் கூடுதல் பெண் காவலர்கள் நியமிக்க ஒன்றிய அரசு உத்தரவு
Watch: This short video on child trafficking in India will make you cringe  - FYI News

இந்த அமைப்பு குழந்தைகள் கடத்தல் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் 2020 ஏப்ரல் முதல் 2021 ஜூன் முடிய உள்ள காலத்தில் இந்தியாவில் கடத்தப்பட்ட 9 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு தெரிவிக்கிறது.

Kailash Satyarthi | Nobel Peace Laureate India

இந்த குழந்தைகள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பது தான் அதிர்ச்சிகரமான தகவல் ஆகும்.

ALSO READ  பிரதமர் உட்பட அனைத்து எம்பி களுக்கும் 30 சதவீத ஊதியம் கட்….

இந்த அமைப்பின் ஆய்வின்படி பள்ளிகள் செயல்படாத காரணத்தாலும், பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டதன் காரணமாகும், பள்ளிகள் செயல்படாத காரணத்தால், குழந்தைகள் பள்ளி இடைநிற்றல் காரணமாகவும் குழந்தை தொழிலாளர்களாக மாறி உள்ளனர் என்ற தகவலையும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : காயம் காரணமாக வெளியேறினார் ஹர்திக் பாண்டியா

Admin

காதலை ஏற்ற 12 மணிநேரத்தில் காதலனை கரம்பிடித்த காதலி

Admin

மத்தியப் பிரதேச கவர்னர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்…. 

naveen santhakumar