உலகம்

கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்பு முது கலைப் பட்டப்படிப்பு பயின்ற மதுரையை சேர்ந்த இளம் பெண் அறிவியலாளர் கவுதமி பாலசுப்ரமணியன் கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான புதிய மருந்து கண்டுபிடுத்துள்ளார்.

அறிவியலாளர் கவுதமி பாலசுப்ரமணியன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தன்னுடல் தாக்கும் வீக்கமுள்ள நோய்கள் குறித்த சில ஆராய்ச்சி மேற்கொண்டு முடிவுகளை கண்டறிந்தார். இவரது ஆராய்ச்சி முடிவுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக ஆன்காலஜி துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவரது ஆராய்ச்சியின் முடிவுகள் அடிப்படையில் கொரோனா நோயின் தீவிர தாக்குதல்களால் உருவாகும் அதீத வீக்கம், மூச்சுத்திணறல் போன்றவற்றால் நிகழும் எண்ணற்ற மரணங்களை தடுக்கும் ஆற்றல்
அறிவியலாளர் கவுதமி பாலசுப்ரமணியன் கண்டறிந்த மருந்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

ALSO READ  வாரம் 4 நாட்கள் அலுவலகம் வந்தால் போதும்
The UK's 100 leading practising scientists | Times Higher Education (THE)

இவரால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர விரும்புகிறார். இவர் கண்டுபிடித்த மருந்து தடுப்பு மருந்து அல்ல. இந்த மருந்தின் மூலம் கொரோனா நோயாளி களுக்கு ஏற்படும் அதிதீவிரதாக்கமான வீக்கம், காய்ச்சல், மூச்சுதிணறலை உருவாக் கும் டிஎன்எப் ஆல்ஃபாவின் ஒரு பகுதி தடுத்து நிறுத்த படுவதால் மேற்கூறிய வீக்கம், காய்ச்சல், மூச்சு திணறல் குறைந்து உயிர் இழப்புகளை தடுத்து நிறுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

அறிவியலாளர் கவுதமி பாலசுப்ரமணியன் கண்டுபிடித்த மருந்தின் பயன்பாடு அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்னே ஆச்சரியம்- 1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுப்பு…!

naveen santhakumar

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சத்தமாக பேசிய 5 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யர்:-

naveen santhakumar

பள்ளிகள் திறக்கப்பட்டதால் பெரும்பாலான குழந்தைகளுக்கு கொரோனா பரவல்:

naveen santhakumar