இந்தியா

இந்திய ராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – ஆன்லைனில் 31.08.2021விண்ணப்பிக்கலாம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய துணை ராணுவப் படைப்பிரிவுகளில் 25,271 கான்ஸ்டபிள் (Central Armed Police Forces) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளது குறித்த அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.

இதற்கான தேர்வு மையங்களாக சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, சேலம், திருச்சி, வேலூர், திருநெல்வேலி ஆகியவை இருக்கும். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

இதற்கான கல்வித்தகுதியாக குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிசி (National Cadet Corps) பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ  காஷ்மீர் எல்லையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: இந்திய இராணுவம் அதிரடி..!

ஆண்களுக்கான உடற்தகுதி குறைந்தபட்சம் உயரம் 170 செ.மீ, மார்பளவு 80 செ.மீ, இருக்க வேண்டும். , மார்பளவு 5 செ.மீ விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கான உடற்தகுதி குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும்.

ஆண்கள் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 6.5 நிமிடங்களில் ஓடும் உடற்திறன் பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள் 800 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்களில்ஓடும் உடற்திறன் பெற்றிருக்க வேண்டும்.

Indian Army recruitment 2021: Indian Army Bharti 2021: भारतीय सेना में  शामिल होने का सुनहरा मौका, 8वीं से 12वीं पास तक करें अप्लाई - indian army  recruitment rally 2021 for 8th to

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.27,700 முதல் ரூ 69,100 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ALSO READ  உறைய வைக்கும் மைனஸ் டிகிரியில் கடுமையான பயிற்சி மேற்கொள்ளும் சீனர்கள்- வைரலாகும் புகைப்படங்கள்

இத்தேர்வுக்கான வயதுவரம்பு 01.08.2021 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Indian Army Recruitment Rally 2021: Open recruitment for women candidates  from January 18-30; know details

எஸ்எஸ்சி-யால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ரூ.100 விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் www.ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜனவரி-4 முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு:

naveen santhakumar

‘நான்தான் நிஷா ஜிண்டால்’… பெண் பெயரில் போலி கணக்கு… பதினோரு வருடங்களாக அரியர் எழுதிவரும் இன்ஜினியரிங் பட்டதாரியின் தில்லாலங்கடி….

naveen santhakumar

Казино Пин Ап Онлайн Pin Up 【официальное Зеркало】рабочего Сайта На сегодня День Бонус: 25000р 250 Fs

Shobika