தமிழகம்

குடிமகன்கள் ஷாக்- உச்சம் தொட்டது மது விலை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை 500 ரூபாய் வரை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது மது பிரியர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. 

கொரனோ பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில், தற்போது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மது விற்பனை செய்யப்படுகிறது. 

ALSO READ  கொரோனா எதிரொலி; தமிழக-கேரளா எல்லை தீவிர சோதனை !

இந்நிலையில் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தி இருப்பது மது பிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கடந்த மே மாதம் விலை உயர்த்தப்பட்டது. இதன்படி, சாதாரண வகை மது பாட்டிலின் விலை 10 ரூபாயும் ப்ரீமியம் வகை மது பாட்டிலில் விலை 20 ரூபாயுன் உயர்த்தப்பட்டது. 

இதேபோல், தற்போது வெளிநாட்டு மதுபானங்களின் குறைந்த ரக விலை 10 ரூபாயும் நடுத்தர மதுபானங்கள் விலை 300 ரூபாயும் உயர்ரக மதுபானங்களின் விலை 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

ALSO READ  நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்....

அதாவது பெய்லி ஐரீஷ், ஜானிவாக்கர் உள்ளிட்ட மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாது மொத்த விற்பனை செய்யப்படும் கூடங்களிலும் இந்த விலை உயர்வு அமலாகியுள்ளது. 

தற்போது டாஸ்மாக்கிலேயே மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் தனியார் பார்களில் மதுபானங்களின் விலை இன்னும் பன்மடங்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திமுக ஆட்சி குறித்து ஆறு மாதத்திற்கு பின்பு தான் பேச முடியும் – அண்ணாமலை

News Editor

கவர்னர் பயணத்தின் போது மக்கள் பாதிக்கப்பட கூடாது : கவர்னர் ஆர்.என்.ரவி

News Editor

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்; கண்டுக்கொள்ளாத பள்ளி நிர்வாகத்திற்கு கனிமொழி கண்டனம் !

News Editor