இந்தியா

ஸ்க்ரப் டைபஸ்- இந்தியாவை மிரட்டும் புது வைரஸ்…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா இதுவரையில் முடிவுக்கு வராத நிலையில் புதிய உயிர்க்கொல்லி வைரஸ் பரவி வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக, மதுரா, மெயின்புரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மக்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இது டெங்கு அல்லது கொரோனா வைரஸின் வேரியண்டுகளாக இருக்கும் என மருத்துவர்கள் சந்தேகப்பட்ட நிலையில், இவை இரண்டும் அல்ல என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தீவிர பரிசோதனை மேற்கொண்டதில் ’ஸ்க்ரப் வைரஸ்’ என்பது உறுதி செய்யப்பட்டது. 

மைட் போர்ட் ரிக்கெட்டிசியோசிஸ் (mite-borne rickettsiosis) என்று அழைக்கப்படும் இந்த ஸ்க்ரப் வைரஸால் மதுரா மாவட்டத்தில் மட்டும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 30 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளன.

ALSO READ  கிருமிநாசினிகள் தெளிப்பது வைரஸை கொள்ளாது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்-WHO…

சரி, இந்த ஸ்க்ரப் டைபஸ் என்றால் என்ன?

இந்த தொற்று ‘ஓரியன்டியா சுட்சுகாமுஷி’ (Orientia tsutsugamushi) எனும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC), கூறியுள்ளது. 

இந்த ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்றுள்ள ’லார்வா பூச்சிகள்’ கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்பட்டுள்ளது

ஸ்க்ரப் டைபஸின் அறிகுறிகள் என்ன?

கொரோனா மற்றும் டெங்குவை போல காய்ச்சல், தலைவலி, உடல் வலிகள் ஏற்படும் சில நேரங்களில் சொறியும் ஏற்படும். 

இந்நோயின் தாக்கம் தீவிரமான நிலையை எட்டியிருந்தால் நிமோனிடிஸ், மூளைக்காய்ச்சல், மனநிலை குழப்பம் அல்லது கோமா, இதய செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம்.

சரி, ஸ்க்ரப் டைபஸுக்கு ஏதேனும் தடுப்பூசி உள்ளதா? என்றால்,

ALSO READ  சிறுநீர் பானிபூரியா? கம்பி எண்ணும் பையா- அதிர்ச்சி வீடியோ…!

வேகமாக பரவி வரும் ஸ்க்ரப் வைரஸ் பரவலுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

அப்போது ஸ்க்ரப் டைபஸுக்கு சிகிச்சை தான் என்ன ?

மத்திய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்க்ரப் டைபஸ் பாதிக்கப்பட்டவருக்கு டாக்ஸிசைக்ளின் (doxycycline) என்ற மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த ஸ்க்ரப் டைபஸ் எந்தெந்த நாடுகளில் பரவியுள்ளது?

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது போல் ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் இந்தோனேஷியா, சீனா, ஜப்பான் மற்றும் வடகிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளிலும் இந்த வைரஸின் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்க்ரப் டைபஸைத் தடுக்கும் வழிகள்

தலை முதல் கால் வரை மூடி இருக்க வேண்டும். கொசுக்கள் மற்றும் லார்வா பூச்சிகள் இந்த நோயைப் பரப்புவதால், அவை கடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாலையில் தரையிறங்கிய விமானம்

Admin

தெலுங்கானாவில் பட்டாசு விற்க,வெடிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியது:

naveen santhakumar

கர்ப்பிணித் தாயை தூக்கிச்சென்ற 100 ராணுவ வீரர்கள்

Admin