தமிழகம்

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாணவர்கள் குஷியோ குஷி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்னியாகுமரியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

புயல் தாக்கம்: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு வரும் 28-ம் தேதி வரை  விடுமுறை நீட்டிப்பு | Cyclone Nivar: Holidays extended to 28th for schools  in Karaikal, Pondicherry ...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ  சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டார் ராகுல் காந்தி!

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ  நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில் மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக தங்களது வீட்டில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

துப்பாக்கியை பயன்படுத்த போலீசார் தயங்கக்கூடாது – டி.ஜி.பி.சைலேந்திர பாபு

naveen santhakumar

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு இருக்கா – இல்லையா!

Admin

ஆதார் எண் கட்டாயம்-TNPSC அறிவிப்பு:

naveen santhakumar