இந்தியா

பிரதமர் மோடியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தாதா சாகேப் பால்கே விருது வாங்க டெல்லி சென்ற ரஜினிகாந்த், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி - நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கி சிறப்பித்தார்.

தமிழ் சினிமாவில் இவ்விருதினை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குனர் பாலச்சந்தர் மட்டுமே பெற்றுள்ளனர். அந்த வகையில் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை தமிழ் சினிமாவில் பெரும் மூன்றாவது நபர் ரஜினிகாந்த் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ALSO READ  தேசிய அளவில் டிரெண்ட் ஆகும் 'நோ சார்' ஹேஷ்டேக்- சமூக வலைதளங்களில் இருந்து விலக வேண்டாம் என பிரதமருக்கு கோரிக்கை..!!!

இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். பிதமர் மோடியுடனான சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினி காந்தும் உடன் இருந்தார். அதேபோல், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

ALSO READ  central-லில் மோடி, state-லில் ரஜினி ; அர்ஜுன் சம்பத் 

மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2020-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு..!

Admin

21 நாள் ஊரடங்கை கிராமத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக மாற்றிய மகாராஷ்டிர தம்பதி…

naveen santhakumar

கொரோனா பரவல்: பி.எஃப்.புதிய விதிமுறைபடி இனி பணம் எடுக்கலாம்

naveen santhakumar