இந்தியா

ரூ.7.4 கோடி சர்வதேச பரிசு – பாதி பணத்தை 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வழங்கும் மராட்டிய ஆசிரியர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சர்வதேச ஆசிரியர் விருதை வென்ற சோலாப்பூரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தான் பாிசாக பெற்ற ரூ.7.4 கோடியில் 50 சதவீதத்தை தன்னுடன் இறுதி சுற்றில் போட்டியிட்டவர்களுக்கு வழங்குகிறார்.

Solapur teacher to share Rs 7-crore global award

லண்டனை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று ஆண்டுதோறும் கல்வி பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கவுரப்படுத்தும் வகையில் சர்வதேச ஆசிரியர் விருதை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு சர்வதேச ஆசிரியர் விருதுக்காக உலகம் முழுவதும் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலே சர்வதேச ஆசிரியர் விருதை வென்று உள்ளார்.

சோலாப்பூர் மாவட்டம் பரிதேவாடி மாவட்ட பஞ்சாயத்து ஆரம்ப பள்ளியில் கடந்த 2009-ல் பணிக்கு சேர்ந்தார் ரஞ்சித்சிங் திசாலே. மாட்டு தொழுவத்திற்கும், குப்பை கிடங்குக்கும் இடையே இருந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்த அவர் உள்ளூர் மொழியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் கிடைக்க செய்தார்.

இதேபோல க்யூர்.ஆர் கோடு மூலம் மாணவர்களுக்கு ஆடியோ, வீடியோ வடிவில் பாடங்கள் கிடைக்க வழி செய்தார். இதனால் அந்த கிராமத்தில் பெண் குழந்தைகளின் பள்ளி வருகையை 100 சதவீதம் உறுதி செய்தார்.

ALSO READ  டெல்டா பிளஸ்- இந்த கிளம்பிருச்சுல புதுசா ஒன்னு ; மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

இந்நிலையில் சர்வதேச ஆசிரியர் விருதை வெற்றி பெற்ற ஆசிரியருக்கு 10 லட்சம் டாலர் (ரூ.7.4 கோடி) பரிசாக வழங்கப்பட உள்ளது. இதில் அவர் 50 சதவீதத்தை தன்னுடன் இறுதி சுற்றுவரை வந்த 10 போட்டியாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

ஆசிரியர்கள் எப்போதும் தங்களது அறிவை மாணவர்கள் இடையே பகிர்ந்து கொள்பவர்கள். கல்விதுறையில் நான் செய்த பணிக்காக இந்த பரிசு கிடைத்து இருக்கிறது. எனவே பரிசு தொகையில் 50 சதவீத்தை 2-வது இடம் வந்த ஆசிரியர்களுக்கு வழங்குகிறேன்.

ALSO READ  மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 44 பேர் உயிரிழப்பு..!

இது அவர்கள் தங்களது நாட்டில் செய்ய இருந்த பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். நான் இந்திய மாணவர்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன். அதே நேரத்தில் நாடுகளில் எல்லைகளில் உள்ள மாணவர்களுக்காகவும் பணியாற்ற விரும்புகிறேன்.

இந்த உலகமே எனது வகுப்பறை என நம்புகிறேன். இதேபோல பரிசுத்தொகையில் 30 சதவீதத்தை ஆசிரியர் புத்தாக்க நிதிக்கு ஒதுக்க திட்டமிட்டு உள்ளேன். நாட்டில் பல ஆசிரியர்கள் பாடம் கற்று கொடுக்க பல புதிய முறைகளை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த கண்டுபிடிப்புகளுக்கு இந்த தொகை உதவியாக இருக்கும் என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம்-உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா:

naveen santhakumar

இந்திய-நேபாள எல்லையில் துப்பாக்கி சூடு !இந்தியர் ஒருவர் பலி, இருவர் காயம்…

naveen santhakumar

ஏழைகளுக்கு 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒன்றிய அரசு ஒப்புதல்

News Editor