இந்தியா

இந்திய-நேபாள எல்லையில் துப்பாக்கி சூடு !இந்தியர் ஒருவர் பலி, இருவர் காயம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீகார்:-

பீகார் மாநிலத்தில் இந்திய – நேபாள எல்லையில் நேபாள போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 

பீகார் மாநிலத்தில் நேபாள எல்லையை ஒட்டியுள்ள சீத்தாமார்கி மாவட்டத்தில் லால்பன்டி-ஜங்கி நகர் எல்லையில்,நேபாள போலீசாருக்கும், காலை 8:40 மணியளவில் பீகாரைச் சேர்ந்த சிலர் நேபாளத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது எல்லையில் நேபாள போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்லும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள். இனால் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நேபாள எல்லைக்குள் இருந்து அந்த நாட்டு போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், இந்தியாவைச் சேர்ந்த விகேஷ் குமார் ராய் (25) என்பவர் உயிரிழந்தார். உதய் தாக்கூர், உமேஷ் ராம் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

ALSO READ  ராமர் இந்தியர் அல்ல; அவர் ஒரு நேபாளி- கே.பி.ஒலி புதிய சர்ச்சை... 
courtesy.

இதுகுறித்து சீமா சுரக்ஷா பால் ஐஜி சஞ்சய் குமார் கூறுகையில்:-

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாநில அரசிற்கு தகவல் தெரிவித்துள்ளோம் தற்பொழுது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தற்போது இங்கு நடைபெறும் சம்பவங்களை  கண்காணித்து வருகிறோம் என்றார். 

ALSO READ  நேபாள பள்ளிகளில் சீன மொழி கட்டாயம்…
courtesy.

தற்பொழுது நேபாள நாட்டு போலீசார் நாராயண்பூர் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கண்ட தாக்குதலில் போலீசார் 17 முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. 

எல்லை பிரச்சினை தொடர்பாக சமீபகாலமாக இந்தியாவிற்கும் நேபாளுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்திய நேபாள எல்லையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் சீனா உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராகுலிடம் நான் தவறாக மொழிபெயர்க்கவில்லை-முதல்வர் நாராயணசாமி விளக்கம்

naveen santhakumar

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டையில் முதல் பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

naveen santhakumar

எம்பிபிஎஸ் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!

naveen santhakumar