உலகம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களால் ஆபத்து… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒமிக்ரான் அதிவேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் தொற்று இதுவரை 89 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தலா ஒருவர் உயிரிழந்தது பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஒமிக்ரான் அதிவேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

உலக நாடுகளில் ஓமிக்ரான் அதிவேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்யுமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

ALSO READ  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு....கொரோனாவை கண்டறியும் மாஸ்க்....!!!

கொரோனாவின் உருமாறிய வைரஸான ஓமிக்ரான் டெல்டாவை விட பன்மடங்கு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் நோயில் இருந்து மீண்டவர்களும் கூட ஓமிக்ரான்  வைரசால் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ  இதோ வந்துவிட்டது டெல்டா பிளஸ் வைரஸை விட மிக தீவிரமான லாம்ப்டா வைரஸ்…!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு  கொண்டாட்டங்களை தள்ளி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம் என அறிவுறுத்தியுள்ள அவர், வாழ்க்கையை இழப்பதை விட, நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.

கொண்டாடிவிட்டு பிறகு வருத்தப்படுவதை  விட, தற்போது ஒத்தி வைத்து விட்டு பிறகு கொண்டாடலாம் என டெட்ராஸ் அதானம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசியை தயாரித்த ஜான்சன் & ஜான்சன்..

naveen santhakumar

திருடுவது மட்டுமே என் நோக்கம் – ஸ்விட்சர்லாந்து திருடனின் கதை

Admin

வருகிற 19-ம் தேதி முதல் இந்த நாட்டில் மாஸ்க் அணிய தேவையில்லை :

Shobika