தமிழகம்

சேலம் வந்த அமெரிக்க பெண் பொறியாளருக்கு ஒமைக்ரான் உறுதி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவில் இருந்து சேலம் வந்த பெண் பொறியாளர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான பெண் பொறியாளர் அமெரிக்காவில் இருந்து கடந்த 13-ம் தேதி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கு அவருக்கு ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, சென்னையிலேயே 4 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்த நிலையில், மீண்டும் கடந்த 17-ம் தேதி அவரது சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் வந்த அவர், வீட்டிலேயே 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.

ALSO READ  டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு அமெரிக்க MP-க்கள் ஆதரவு:

இந்நிலையில் சளி மாதிரி பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட பெண் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பதும், அவருடன் விமானத்தில் வந்த மற்ற பயணிகளுக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத் தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

News Editor

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!

Shanthi

கட்டுக்குள் வராத கொரோனா; ஊரடங்கை நீட்டிக்கிறதா தமிழக அரசு !

News Editor