தமிழகம்

வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வரும் முன் காப்போம் திட்டத்தை சேலம் வாழ்ப்பாடியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்!

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், வாழப்பாடி அரசு பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடர்ந்து, வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது. 2530 பயனாளிகளுக்கு ரூ.24.73 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

ALSO READ  18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு உத்தரவு…!

கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி காலத்தில் வருமுன் காப்போம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏழை, எளிய மக்களை நோய் பாதிப்பியிலிருந்து முன்கூட்டியே தடுக்கும் விதத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மேலும், 100% தடுப்பூசி இலக்கை அடைந்த ஊராட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சான்றுதலும் வழங்கினார். இந்த விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போட தயார்: டெல்லிக்கு கடிதம் எழுதிய தமிழக காவலர்…

Admin

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை !  

News Editor

மின்சார ரயில்களில் பயணிக்க அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம் : முகக்கவசம் அணிந்து அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

News Editor