இந்தியா

இந்திய ராணுவத்தின் கரு பிறந்த தினம் இன்று!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

“நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

Bose, Not Gandhi, Ended British Rule In India: Ambedkar

ஒரு வங்காள இந்து குடும்பத்தில் ஒன்பதாவது மகனாக பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். பெற்றோரின் ஆசைக்கிணங்க இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆங்கிலேயரிடம் பணிக்கு சேர்ந்தார். ‘தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது’ என முடிவு செய்து தனது பதவியை ராஜினாமா செய்தார். 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட நேதாஜி 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.

நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் சுபாஸின் கொள்கை. தனது கொள்கையை முழங்கி ஒவ்வொரு இளைஞனையும் தனது சீரிய பேச்சால் சுதந்திர போரில் பங்குபெற செய்தார். இவ்வரின் கொள்கையை பார்த்து வியந்த ரவீந்திரநாத் தாகூர் நேதாஜி என்ற பட்டத்தை வழங்கினார். மக்களின் மனதில் சுதந்திர எண்ணத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக சுபாஷை பிரிட்டிஷ் அரசு சிறை பிடித்தது. சிறையில் இருக்கும் போதே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார் நேதாஜி.

ALSO READ  Main Slot Demo Aztec Bonanza di Malam Hari: Ngopi Sambil Menelusuri Kejayaan Suku Aztec

1939 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நேதாஜிக்கு எதிராக காந்தி வேட்பாளரை களமிறக்கினார். அத்தேர்தலில் நேதாஜி வெற்றி பெற இது தனக்கு பெரிய இழப்பு என்று வெளிப்படையாக அறிவித்தார் காந்தி. இதனால், நேதாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாக வெளியேறி பார்வர்ட் பிளாக் என்ற கட்சியைத் துவங்கினார்.

1941-ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையத்தையும் நிறுவி, நாட்டுக்கெனத் தனிக் கொடியை அமைத்து, ஜன கணமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி 1943 ல் இந்திய தேசிய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பேற்றார். இதில் பெண்களுக்கெனத் தனிப் பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார்.

கிட்டத்தட்ட 40,000திற்கும் மேற்பட்ட போர் வீரர்களை கொண்ட நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ படை பிரிட்டனுக்கு எதிராக போரிட்டது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்தனர். தமிழர்களின் நாட்டுப்பற்றைக் கண்டு வியந்த அவர் அடுத்த ஜென்மத்தில் தமிழராய் பிறக்க ஆசை கொள்வதாக தெரிவித்தார். போர் சூழலில் நேதாஜியின் போர் வியூகங்களும், தாக்கும் முறைகளும் மிக நேர்தியானவை. இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்கக் ஒரு நிகழ்வு முக்கிய காரனமாக அமைந்தது.

ALSO READ  பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார்.  

வீட்டுச் சிறையில் கண்கானிப்பில் இருந்த நேதாஜி,ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தப்பித்தார். சுபாஷைக் காணவில்லை என நாடே அல்லோலப்பட்ட போது , ஜெர்மனியிலிருந்து முழங்கினார் சுபாஷ் , மொத்த உலகமும் இந்தப் போராளியைப் பார்த்து வியந்தது. உலகின் தலைசிறந்த எஸ்கேப்களில் நேதாஜி பெயருக்கு ஸ்பெஷல் இடம் இன்றும் உண்டு.

“எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்” என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்க்கா இடம் பெற்றிருக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தெலுங்கானாவில் பட்டாசு விற்க,வெடிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியது:

naveen santhakumar

தந்தையை 1200 கிமீ தூரம் சைக்கிளில் வைத்து அழைத்துச்சென்ற 15 வயது பீகார் சிறுமிக்கு அடித்த அதிர்ஷடம்.. 

naveen santhakumar

நந்திகிராம் தொகுதியில் தீடீர் திருப்பம்; மம்தா தோல்வி !

News Editor