இந்தியா

நந்திகிராம் தொகுதியில் தீடீர் திருப்பம்; மம்தா தோல்வி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அங்குள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கியது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகிறது. 

ALSO READ  இன்று முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி !


அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி  215 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணி 76 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் தீடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ  ஆடிப் பாடி மக்களை மகிழ்வித்த ஸ்பெயின் நாட்டுப் போலீஸார்....

அதன்படி மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்த் அதிகாரி 1, 957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மம்தா பானர்ஜி தனது தோல்வியை ஒத்துக் கொள்ளவதாக கூறியுள்ளார்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜூலை 31 வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்- மத்திய அரசு…

naveen santhakumar

கொரோனா தடுப்பு மருந்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜ்ஜூக்கு செலுத்தி பரிசோதனை:

naveen santhakumar

இந்தியாவிற்கு விரைவில் 33 போர் விமானங்களை வழங்குகிறது ரஷ்யா… 

naveen santhakumar