இந்தியா வணிகம்

கொரோனா இந்தியாவிற்கு வழங்கியுள்ள வாய்ப்புகள் என்ன.??? பொருளாதார நிபுணர் விளக்கம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.

ஆனால், இந்தியா இந்த நிலையிலிருந்து விரைவில் மீண்டு வருமென்று பொருளாதார நிபுணர் டாக்டர் துர்க்கதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து, பொருளாதார நிபுணர் Dr.துர்க்கதாஸ் கூறுகையில்:-

கொரோனா நமக்கு வழக்கியுள்ள வாய்ப்புகள் ஏராளம். இந்த வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் கடும் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. ஆனாலும் நமது பொருளாதாரம் வளர்ச்சி ஸ்திரத்தன்மையோடு திகழ்கிறது.

இந்தக் கொரோனா வைரஸை குணப்படுத்தக் கூடிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படாத வரை இந்த கொரோனா குறித்த அச்சம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

உலக நாடுகள் அனைத்தும் தற்பொழுது முழுமையான ஊரடங்கில் உள்ளது. இத்தியா போன்ற நாடுகள் இதற்கு தீர்வு கிடைக்காதவரை தனது வான் பரப்பை வெளிநாட்டினருக்கு திறந்து விடாது. ஆஸ்திரேலியாவை எடுத்துக்கொண்டால் அடுத்த ஆறு மாதங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இதுபோன்று காரணங்களால் உலகம் முழுவதும் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் நீண்ட நாட்களுக்கானது.

ALSO READ  அம்பானி வீட்டில் தற்கொலை செய்த இளைஞர் - காரணம் என்ன ?

இந்த இக்கட்டான சூழ்நிலை உண்மையில் இந்தியாவிற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியா கொரோனாவிற்கான ஏதேனும் தீர்வையோ அல்லது ஏதேனும் ஒரு முன் ஏற்பாட்டையும் செய்தால் மேற்கு நாடுகள் இந்தியாவை சீனாவிற்கான ஒரு மாற்றாக பார்க்கும். இதனால் சீனாவின் பலம்வாய்ந்த வர்த்தக சங்கிலியை இந்தியாவில் உடைத்து பெரும் வெற்றியாளராக வர வாய்ப்புள்ளது.

உலகளவில் ஒப்பிடும்பொழுது இந்தியாவின் இந்த இரண்டு சதவீத ஜிடிபி வளர்ச்சி நிச்சயமாக ஒரு நல்ல வளர்ச்சியாக தான் பார்க்கப்படுகிறது. ஒருவேளை 2020/21-ல் நமது பொருளாதார வளர்ச்சி கீழே சென்றாலும் அடுத்த வருடங்களில் நம்மால் உச்சத்தை எட்ட முடியும்.

இந்த கொரோனா பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்ட பிறகு ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் முழுவதுமாக மாற்றமடையும். இதில் இந்தியாவால் தன்னை முழுமையாக பொறுத்துக்கொள்ள முடியும்.

இந்த வைரஸை குணப்படுத்த பல்வேறு தீர்வுகள் உள்ளன. இதற்கு முழுமையான எதிர்ப்பு மருந்து தயாரிப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகும். ஆனால் இந்த வைரஸ் சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. எனவே முன்பு இந்த சார்ஸ் (Sars) மற்றும் மெர்ஸ் (Mers) வைரஸ்களுக்கு முயற்சி செய்து பாதியில் கைவிடப்பட்ட மருந்துகளை மீண்டும் பரிசோதித்து பார்க்கலாம். இந்த வைரஸ் பாதித்து குணமான நபர்களின் ரத்ததை பரிசோதனை செய்து அதன் மூலமாக எதிர்ப்பு பொருட்களை உருவாக்கலாம். இவற்றை நேரடியாக அல்லாமல் சிமுலேஷன் (Simulation) முறையில் ஆய்வுக்கு உட்படுத்தி பார்க்கலாம். இதன் மூலமாக நேரம் விரயமாவது தடுக்கப்படும்.

ALSO READ  ஊடரக்கில் மக்களை வீட்டுக்குள்ளேயே வைக்க BCCI புது ஐடியா....

ஜோதிட ரீதியாக பார்த்தால் கூட வரும் ஏப்ரல் 14 அல்லது மே 28 இந்த தேதிகளில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் அல்லது இதற்குப் பிறகு இந்த வைரஸ் தனது மாற்றமடையும் திறனை (Mutation) இழக்கும்.

இவற்றுக்கெல்லாம் இந்தியாவால் ஒரு நல்ல தீர்வை கொடுக்க முடிந்தால். தனது 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை 2024 வேண்டுமானால் எட்ட முடியாமல் போகலாம். ஆனால் 2025-26 ஆகிய ஆண்டுகளில் நிச்சயமாக எட்டும்.

இதனிடையே உலக அளவில் ஒப்பிடுகையில் இந்தியா அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக மாறி வருகிறது என்று எக்கனாமிக் இன்டெலிஜென்ஸ் யூனிட் (EIU) கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மோடி முதலிடம் – டுவிட்டரில் 7 கோடி பாலோயர்களை கடந்த மோடி..!

naveen santhakumar

கடத்தல்காரர்களிடம் சண்டையிட்டு போராடி மகளை மீட்ட தாய்! வீடியோ உள்ளே…

naveen santhakumar

مراهنات كرة القدم اون لاين أفضل مواقع مراهنات رياضي

Shobika