உலகம் வணிகம்

கொரோனா வைரஸ் தாக்கத்திலும் கூட உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரம் ஆக மாறியது இந்தியா.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இதனால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. குறிப்பாக ஜி 20 நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இன்றைய சூழ்நிலையில் இது ஒரு அதி வேகமாக வளரும் பொருளாதாரம் ஆக உள்ளது என்று எக்கனாமிக் இண்டலிஜென்ஸ் யூனிட் (Economic Intelligence Unit) கூறியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது தற்போது இந்தியாவின் ஜிடிபி மதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவைத் தவிர சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் ஜிடிபி மதிப்பு வளர்ந்துள்ளது. இவை இரண்டும் தலா ஒரு சதவீத வட்டியுடன் உள்ளது. 

ALSO READ  பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சி......
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி.

சார்ஸ் வைரஸ் பாதிப்பிற்கு பிறகு தற்பொழுது தான் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 6.1 ஆக இருந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு ஒரு சதவீதமாக உள்ளது.

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது பல முன்னணி நாடுகளின் பொருளாதாரம் மிகவும் கீழே சென்றுள்ளது.

உலகின் வல்லரசான அமெரிக்கா கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக திகழ்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2.8 சதவீதமாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டுகளில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் மோசமான பொருளாதார வளர்ச்சி ஆகும்.

ALSO READ  மனித குலத்திற்கு ஏற்படப்போகும் பேரிழப்பு... ஷாக் ரிப்போர்ட்..

அடுத்ததாக கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் பொருளாதார வளர்ச்சி -7 சதவீதமாக உள்ளது. அதிகளவு கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதியாக ஐரோப்பிய நாடுகள் உள்ளது. இங்கு பொருளாதார மந்தநிலை 5.9  சதவீதமாக உள்ளது. ஜெர்மனி பொருளாதார வளர்ச்சி -6.8% பிரான்ஸ் -5% இவ்வாறு வளர்ந்த நாடுகள் பொருளாதாரம் தலைகீழாக மாறியுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளாக கருதப்படும் தென்னமெரிக்க நாடுகளில்  வளர்ச்சி விகிதம் அர்ஜென்டைனா -6.7%, பிரேசில் -5.5% மெக்சிகோ -5.4%.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜோ பிடன் பதவியேற்பையொட்டி வாஷிங்டன் பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது

naveen santhakumar

குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

Admin

5வது மாடியிலிருந்து விழுந்த 8 மாத குழந்தை: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆச்சரியம்…

Admin