சினிமா

பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா !!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென்னிந்திய சினிமா உலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார் திரிஷா.

நடிகை திரிஷா ‘உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்’ என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

தற்போது திரிஷா ஒரு புது படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடித்து வருகிறார்.

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

தற்போது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

ALSO READ  கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா நடித்துள்ள 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம்…

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து படத்தை இயக்குகிறார் மணிரத்தனம்.

ALSO READ  வெளியாகியது "பொன்னியின் செல்வன்" படத்தின் அப்டேட்..!

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய 2 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த படத்தில் நடிகை திரிஷா அவர்கள் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

ராஜராஜ சோழன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். ராஜராஜ சோழனின் அக்காத் தான் குந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கர்ணன்’ படத்தை கைப்பற்றிய மோகன் லால் !

News Editor

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

News Editor

ஸ்விமிங் போட்டோஸ் வெளியிட்ட ப்ரணிதா.

naveen santhakumar