சினிமா

திரெளபதி திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் சத்யராஜ் நடித்த ’வேதம் புதிது’, பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ என்றுத் தொடங்கி ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி, காலா’ வரை ஒடுக்கப்பட்ட சாதிகளின் குரலாக சில படங்கள் ஒலித்திருக்கின்றன.

அதே சமயம், தேவர் மகன், சின்னக் கவுண்டர், நாட்டாமை, கொம்பன், குட்டிபுலி என குறிப்பிட்ட சாதிகளை தூக்கிப் பிடிக்கும் படங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இன்னொரு புதிய படம் உருவாகியிருக்கிறது. திரெளபதி என்ற அந்தப் படத்தை ஜி.மோகன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. சாதி மறுப்பு திருமணத்துக்கு எதிராக படம் உருவாகியிருப்பதை இந்த ட்ரைலர் விளக்குகிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனங்களும் வன்முறையை தூண்டும் விதமாகவும், குறிப்பிட்ட அரசியல் தலைவரை சாடுவதாகவும் அமைந்துள்ளது. என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ALSO READ  விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் !

இதற்கு விளக்கம் அளித்த இயக்குனர், இந்த திரைப்படம் நாடக காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இதில் எந்த அரசியல் தலைவர்களையும் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்தப் படம் வெளிவர அனுமதிக்க கூடாது என்று காவல் துறை ஆணையரிடம் பெரியார் திராவிட கழகம் சார்பில் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரெளபதி திரைப்படம் வெளியாகுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நயன்தாராவுடன் திருமணம் எப்பொழுது?: விக்னேஷ் சிவன் கொடுத்த அடடே விளக்கம்..!

naveen santhakumar

அந்தகன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகர் ! 

News Editor

யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு புரட்சி நடக்கும் என்று; பி.சி.ஸ்ரீராம் கருத்து..!

News Editor