சினிமா

பிரசாந்த் படத்தை இயக்குகிறாரா மோகன் ராஜா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ள அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அந்தாதுன்’. பிரெஞ்சு படத்தின் தழுவலாக உருவான இப்படத்தின் தமிழ் ரீமேக்கை பெற தனுஷ்,சித்தார்த், பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.இறுதியில் நடிகர் பிரசாந்த் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றினார்.

தற்போது இந்தப் படத்தை இயக்குனரும், நடிகர் ஜெயம் ரவியின் சகோதரருமான மோகன் ராஜா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ  வெளியாகியது "அந்தாதூன்" பட  தமிழ் ரீமேக் அப்டேட் ..!

ரீமேக் படங்களை இயக்குவதில் வல்லவர் மோகன் ராஜா. இதனால் அந்தாதுன் படத்தை இயக்க இவர் தான் சரியான ஆள் என்று பிரசாந்த் தரப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் மோகன் ராஜா கடைசியாக வெளியான தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய படங்களை நேரடி தமிழ் படமாக இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜகமே தந்திரம் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor

விஜய் சேதுபதியின் “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது 

News Editor

சீனாவில் ஹன்ஷிகா – ஒரு ஆச்சரிய தகவல்!

naveen santhakumar