சினிமா

பிரம்மாண்ட குழுவுடன் கைகோர்க்கும் தனுஷ்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

‘அவெஞ்சர்ஸ்’ பட இயக்குனர் இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார்.இதை நெட்பிளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ‘தி கிரே மேன்’ என்னும் படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.மார்க் கிரேனியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன்,த்ரில்லர் கதையை கொண்ட இந்த படத்தில் தனுஷின் கேரக்டர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

ALSO READ  'கர்ணன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீடு..!

அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ‘ரூஸோ பிரதர்ஸ்’ என அழைக்கப்படும் ‘அந்தோணி மற்றும் ஜோ ரூசோ’ இயக்கும் இந்தப் படத்தில் ஜெசிக்கா ஹென்விக், வாக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ், கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்மஸ் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் தனுஷும் முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார்.

இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த கௌரவம் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் தனுஷை கொண்டாடி வருகின்றனர். “#TheGrayMan” என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. இதற்கு முன் ‘தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர்’ என்ற ஆங்கில படத்தில் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிய இதுதான் காரணமா?… ரசிகர்கள் அதிர்ச்சி

naveen santhakumar

கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு 

News Editor

முழு ஊரடங்கு…1 சதவீதம் கூட வைரஸ் பரவலை தடுக்காது;  தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கருத்து ! 

News Editor