சினிமா

‘சக்ரா’ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஷால் அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ரெஜினா, மனோ பாலா. சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர் உள்ளிட்டோர்கள் நடித்துள்ளனர். பாலசுரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டே படத்தின் பணிகள் துவங்கப்பட்ட நிலையில் கொரோன காரணமாக  படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. பின்பு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டு படத்தின் அனைத்து பணிகளையும் தற்போது முடித்துள்ளது படக்குழு. சக்ரா படத்தின் வெளியீட்டுக்கு தயாரான படக்குழு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்கிற்கு குறைவான பார்வையாளர்கள் வருகையால் படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்து பல தளங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

ஆனால் தற்போது மாஸ்டர் படம் வெளியிட்டால் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சக்ரா படத்தினை திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

ALSO READ  முதல் முறையை வெற்றிமாறன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!

அதன்படி வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி சக்ரா படம் திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  

#chakra #charkatamilmovie #tamilmovie #tamilthisai #tamilcinema #vishal #shrathasrinath #robosankar #manobala


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெப் தொடரில் பயங்கரவாதியாக நடித்தது குறித்து சமந்தா விளக்கம்:

Shobika

தீபிகா படுகோனேவுக்கு இணையாக மனதை கொள்ளை கொள்ளும் சாயீஷாவின் கியூட் நடனம்..

naveen santhakumar

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்; போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

News Editor