சினிமா

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் ஆர்யா திரைப்படம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள திரைப்படம் ‘டெடி’.  காமெடி கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இதில், சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ALSO READ  வெற்றி பட இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணையும் ஜி.வி பிரகாஷ்..! 

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தது வெளியிட்டு தயாராகவுள்ளது. ஊரடங்கு சமயத்தில் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், திரையரங்குகள் திறக்கப்பட்டதால் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் பெரும் விலை கொடுத்து ‘டெடி’ படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. மார்ச் 19-ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆடை இயக்குனருடன் இணையும் சந்தானம்…!

naveen santhakumar

பழங்கள் விற்பனையில் மும்முரமாக செயல்படும் தெலுங்கு நடிகர் :

Shobika

வைரலாகும் அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள் வீடியோ……

naveen santhakumar