சினிமா

வெற்றி பட இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணையும் ஜி.வி பிரகாஷ்..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அந்த படம் வெளியாகி அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து பல்வேறு படங்களில் நடிகராக நடித்துவருகிறார். அந்தவகையில்   ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’, ‘ஜெயில்’ ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.

ALSO READ  தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் திருமணம் முடிந்துவிட்டது:

இந்நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் ராஜேஷுடன் கைக்கோர்த்துள்ளார். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில்  ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

ஆனந்த்ராஜ், டேனியல், நடிகை ரேஷ்மா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விரைவாக படத்தின் வெளியிட்டு தேதியை அறிவிப்பதாக படக்குழு கூறியுள்ளது.

ALSO READ  கதாநாயகியாக அறிமுகமாகும் கூக் வித் கோமாளி புகழ் பவித்ரா !

#Gvprakash #rajesh #amirthaiyer #anandhraj #reshma #tamilmovie #tamilthisai #tamilcinema


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“தளபதி 65” படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே !

News Editor

திரெளபதி திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்

Admin

நடிகை “ஆர்யா பானர்ஜி” வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்….

News Editor