சினிமா

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை போன்ற தோற்றமுடைய ஜூனைத் ஷா மாரடைப்பால் மரணம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்ரீநகர்:-

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை போன்ற தோற்றமுடைய (Doppelganger) ஜூனைத் ஷா (Junaid Shah) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

காஷ்மீரைச் சேர்ந்தவர் ஜூனைத் ஷா. இவர் ஸ்ரீநகரில் (Srinagar) உள்ள இலாஹி பேஹ் (Ellahi Bagh) பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். இவர் தற்போது பாலிவுட்டில் பிரபலமான நடிகராக உள்ளார். இந்நிலையில் அச்சு அசலாக ரன்பீர் கபூர் போன்றே முகம் மற்றும் உடல் தோற்றமுடைய ஜூனைத் ஷா (28) மும்பையில் மாடலிங் செய்து வந்தார். இவர் சில நேரங்களில் இவர் ரன்பீர் கபூர் டூப்பாகவும் நடித்துள்ளார்.

ALSO READ  சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டார் ராகுல் காந்தி!

ஒருமுறை இவர் குறித்து மறைந்த நடிகர் ரிஷி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்:-

ஜூனைத் ஷா சமீபத்தில் இவரது தந்தையின் நிசார் அகமது ஷாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மும்பையில் இருந்து காஷ்மீர் சென்றுள்ளார். 

ALSO READ  18 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் இணைய சேவை மாற்றம் !

ரன்பீர் கபூரை போன்ற தோற்றமுடைய ஜூனை ஷா மரணத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீபகாலமாகவே பாலிவுட்டிற்கு நேரம் சரியில்லாமல் இருந்து வருகிறது. முக்கிய பாலிவுட் பிரபலங்கள் அடுத்தடுத்து மரணமடைந்தனர். மேலும், தற்போது அமிதாப் பச்சன் குடும்பத்தினர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார் !

News Editor

விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பார்க்காதீர்கள்…அறிக்கை வெளியிட்ட சிம்பு..!

News Editor

‘பிரேமம்’ பட இயக்குநருடன் கைகோர்க்கும் நயன்தாரா 

News Editor