சினிமா

“chill bro” ஆக கலக்கும் தனுஷ்- ‘பட்டாஸ்’ டிரெய்லர் வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தின் டிரைலர் இன்று வெளியானது.இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகைகள் சினேகா, மெஹ்ரின் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் “பட்டாஸ்” . விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 16ம் தேதி ரீலிசாக உள்ளது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே துரை செந்தில்குமார் இயக்கிய கொடி திரைப்படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

ALSO READ  வெளியாகியது விஷ்ணு விஷால் படத்தின் அப்டேட் !

இந்த நிலையில் பட்டாஸ் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் தனுஷ் அப்பா மற்றும் மகன் வேடங்களில் நடித்துள்ளார். “மண்ணின் கலைகளை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும்” என்பது தொடங்கி, “அப்பாவின் பெயரை காப்பாற்றும்படி நடந்து கொள்வதே மகனுக்கு பெருமை”என்ற வசனங்களோடு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.நிச்சயம் இப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு மிகச் சிறப்பாய் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இது தொடர்பாக #PattasTrailer , #PattasPongal என்ற ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்தி பட தமிழ் ரீமேக்கில் இணைத்தார் கார்த்தி 

News Editor

மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு :

Shobika

விஷாலின் “எனிமி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

News Editor