உலகம்

6 நாடுகளுடன் ஈரான் செய்த அணுசக்தி ஒப்பந்தம் ரத்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்கா,ரஷ்யா உட்பட 6 நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஈரான் அறிவித்துள்ளது.ஈரான் அணு ஆயுதங்களை அதிகளவில் வைத்திருந்து பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் வல்லரசு நாடுகள் அதன் மீது பொருளாதார தடை விதித்தன. கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்கா,ரஷ்யா,சீனா,இங்கிலாந்து,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகள் ஈரானுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின.

அதன்படி அணுசக்தி ஒப்பந்தம் என பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஈரான் தனது அணு ஆயுதங்களின் அளவை குறைத்தால் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் திரும்பப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப் படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்க இடையே மோதல் வெடிக்க ஆரம்பித்தது. அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தின் 4 நிபந்தனைகளை ஈரான் நிராகரித்தது.

ALSO READ  பாகிஸ்தானில் காய்கறி வண்டியில் குண்டு வெடிப்பு- 17 பேர் காயம்… 

இந்தநிலையில் கடந்த வாரம் ஈராக்கின் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் அந் நாட்டின் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் ஏற்கனவே இருநாடுகளுக்கும் இடையே இருந்துவந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. தளபதி கொல்லப்பட்டதற்கு ஈரான் கண்டிப்பாக பழி தீர்ப்போம் என சூளுரைத்ததும், ஈரானில் உள்ள 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்தது போன்ற பல நிகழ்வுகள் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தன.

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின் வல்லரசு நாடுகள் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரானின் அணுசக்தித் திட்டம் அந்நாட்டின் சொந்தத் தொழில் நுட்பத்தால் முன்னேறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நான் ஏன் சார் அந்த பொண்ண மட்டும் லவ் பண்ணேன்.??மன்மதனின் கேள்விக்கு பதில் இது தான்..

naveen santhakumar

அறிகுறியே இல்லாமல் பரவும் கொரோனா‌ வைரஸ் ..மீண்டும் உலகம் தாங்குமா.???

naveen santhakumar

‘நிவர்’ புயல்….ஈரான் பரிந்துரை செய்த பெயர் :

naveen santhakumar