சினிமா

‘எனிமி’ படத்தின் டீசர் நாளை வெளியீடு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அவன் இவன்’. இப்படத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

ALSO READ  நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தடை :
Enemy Official First Look-Teaser-Trailer | Arya | Vishal | Anand Shanker | Tamil  Cinema Updates - YouTube

இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில், ‘எனிமி’ படத்தின் டீசரை ஜூலை 24-ம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘வேற லெவல் சகோ’அயலான் படத்தின் பாடல் வெளியீடு..!

News Editor

பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடிய சிம்பு பட நடிகை :

Shobika

‘ஐ லவ் யூ மாமா’ என சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்..!

News Editor