சினிமா

இயக்குநர் சீனு ராமசாமிக்கு திருமணமா?????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தனது திருமணம் தொடர்பாக உருவான வதந்திக்கு இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.

‘கூடல் நகர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதனைத் தொடர்ந்து ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

ALSO READ  கமல் விரைவில் வீடு திரும்புவார் - வைரமுத்து ட்வீட்

இதனிடையே, அவருடைய அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இன்று காலை ‘Got Married’ என்று மாற்றப்பட்டு இருந்தது. இதனால் சீனு ராமசாமி திருமணம் செய்து கொண்டார் எனத் தகவல் பரவியது.இது தொடர்பாக சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி, மகள்களுடன் இனிமையாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன்லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காலையில் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டிருக்கும்போது தவறுதலாக மாற்றப்பட்டுவிட்டதாக அவருடைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் பட நடிகைக்கு குவியும் பாராட்டுக்கள் :

Shobika

பலாப்பழத்தை வைத்தே சீரியல் நடிகையை கரெக்ட் செய்தவர்:

naveen santhakumar

நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி – திடீர் அறுவை சிகிச்சை

naveen santhakumar