சினிமா

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:-

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39. 

சிரஞ்சீவி சர்ஜா  பிரபல தமிழ் நடிகர் அர்ஜூனின் உறவினர் ஆவார். மேலும் மறைந்த முன்னாள் நடிகர் சக்தி பிரசாத்தின் பேரன் ஆவார்.

சிரஞ்சீவி சர்ஜா இன்று மதியம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். நடிகர் சீரஞ்சீவி சர்ஜாவின் மரணம் கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகர் சிரஞ்சீவி சர்ஜா நடிகை மேக்னாவின் கணவர். பெங்களூருவில் பிறந்த சிரஞ்சீவி சார்ஜா தொடக்கத்தில் சினிமா வியாபாரத்தில் இருந்தார். 

ALSO READ  இறந்த கணவருடன் வளைகாப்பு கொண்டாடிய மேக்னா ராஜ்:

பின்னர், நடிகர் அர்ஜூன் படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார். பின்னர், 2009-ம் ஆண்டு ‘வாயுபுத்ரா’ என்றா படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படம் அர்ஜூன் சார்ஜாவின் சகோதரர் கிஷோர் சார்ஜாவால் இயக்கப்பட்டது. இவரது தம்பி துருவா சர்ஜா கன்னடத்தில் பிரபல நடிகர் ஆவார்.

ALSO READ  அரவிந்த்சாமி நடிக்கும்‘வணங்காமுடி’ படத்தின் டீசர் விரைவில் :

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3 சர்வதேச விருதுகளை வென்ற ‘மகாமுனி’ திரைப்படம் :

Shobika

கோலாகல கொண்டாட்டத்துடன் நடந்து முடிந்த அதர்வா தம்பி திருமணம்:

naveen santhakumar

“பீஸ்ட்” படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் :

Shobika