இந்தியா

இப்போ ட்ரெண்டிங் ஸ்வேதா டீச்சர் தான்! போலீஸ் வாட்ச்சிங்! உஷார் மக்களே..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:-

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. ஆகையால் இந்த கல்வியாண்டில் மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடம் கற்க ஆன்லைன் நடைமுறையை அந்தந்த மாநிலங்கள் கடைபிடித்து வருகின்றன.

அதுபோல கேரளாவில் KITE VICTOR CHANNEL என்னும் மலையாள வாயிலாக கடந்த 1ம் தேதி முதல் மாணவர்களுக்கு ஆன்லைனில் படம் எடுக்க முதல்வர் பினராயி விஜயன் பள்ளிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி, கைட் விக்டர்ஸ் சேனலில் கோழிக்கோடை சேர்ந்த சாய் ஸ்வேதா என்ற ஆசிரியை, தனது முதல் வகுப்பை முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தினார். 

கேரளாவிற்கும் நமக்கு மிக நீண்ட பந்தம் உள்ளது. முன்னர் செரில் G காடவன், பிரியா பிரகாஷ் வாரியர் ஆகியோர் பெருமளவில் பிரபலமானவர்கள். இந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் தான் சாய் ஸ்வேதா. ஆன்லைன் வகுப்புகளை மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. அப்படி ஆன்லைன் வகுப்பெடுத்து கேரளாவில் ஒரே நாளில் பிரபலமானவர்தான் ஸ்வேதா டீச்சர்.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் Chombala LP பள்ளியில் 1-ஆம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வரும் சாய் ஸ்வேதா டீச்சரின் வகுப்பிற்காக மாணவர்கள் காலை 8:30 மணிக்கெல்லாம் டிவி அல்லது கணினி முன்பே ஆஜராகி விடுகின்றனர். மாணவர்கள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோர்களும் கூட ஸ்வேதா டீச்சரின் கதை கேட்க தயக்கம் காட்டுவதில்லை.

ALSO READ  கேரளாவின் Snake மான்ஸ்டருக்கு நேர்ந்த சோகம்..

ஆன்லைன் வகுப்பில் இவர் தங்கு பூனை, மிட்டுப்பூனை என்ற கதைகளை குழந்தைகளுக்கேற்றவாறு அழகிய முக பாவனைகளோடு கூறியுள்ளார். அவ்வளவுதான், அன்று முதல் ஸ்வேதா டீச்சர் என்ற ஹாஷ்டேகுகளை கொண்டு அவரது வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரும் நெட்டிசன்களால் சாய் ஸ்வேதா வைரலாகி விட்டார்.

ALSO READ  1win Bahis Sitesi Türkçe Giriş Yap Ve Kaydol İlk Afin De Yatırma Işleminizde Zero Kazanın

ஆனால் அது அவருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும், மற்றொரு புறம் கவலையை தந்துள்ளது. அதற்கு காரணம், சிலர் அவரது புகைப்படங்களை பதிவிட்டு வேறு விதமாக வர்ணித்து வருவதுதான்.

ஆனாலும் பொது வாழ்வில் இப்படியெல்லாம் நடக்கும்தான். இருப்பினும் என் கணவரின் ஆதரவால் நான் என் பணியை தொடர்ந்து செய்வேன் என சாய் ஸ்வேதா முன்னோக்கி செல்கிறார். மேலும், சாய் ஸ்வேதாவை பற்றி சமூக வலைத்தளத்தில் யாராவது தவறாக பதிவிட்டால் உடனே கைது செய்வோம் என கேரள சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஆன்லைனில் வகுப்பெடுக்கும் ஆசிரியைகளை கிண்டல் செய்தது தொடர்பாக நான்கு +12 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே நெட்டிசன்களை கேரள போலீஸ் கண்காணித்துக் கொண்டிருக்கிறது  ஆகையால் உஷாராக இருங்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: டெல்லி இளைஞர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…! 

naveen santhakumar

இறப்பு சான்றிதழ்: மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் என்ன?

News Editor

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த புதுவை முதல்வர்!

News Editor