சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் படத்தில் நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியாகி வெற்றி நடைபோடும் படம் மாஸ்டர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன.

ALSO READ  மாஸ்டர் போஸ்டரை கலாய்த்து மீம்ஸ்

இதனையடுத்து மாஸ்டர் திரைபடத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் ஹிந்தி ரீமேக் உரிமத்தை எண்டமால் ஷைன் இந்தியா நிறுவனம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளது.இந்நிலையில், மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதியே நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தடையை உடைத்து திரைக்கு வரும் ‘சக்ரா’; மகிழ்ச்சியில் விஷால் ரசிகர்கள்..!

News Editor

“இதை பண்ணாதீர்கள்” மாஸ்டர் படம் குறித்து அர்ஜுன் தாஸ் கருத்து !

News Editor

“இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது”

Shanthi