சினிமா

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ராக்கி…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தரமணி நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ராக்கி. 


தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ராக்கி  படத்தின் வெளியீட்டு உரிமையை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

ALSO READ  100 ஏழை மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்...சோனு சூட்டிற்கு குவியும் பாராட்டுகள்!

சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தை திரையரங்கில் வெளியிட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்து, திரையரங்குகள் மூடப்பட்டது. 


இந்நிலையில் தற்போது இந்த படம் ஓடிடி தளமான சோனி லைவில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ALSO READ  பலே பரோட்டா திருடர்கள்

ஏற்கனவே, சோனி லைவ்வில் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘வாழ்’, கார்த்திக் நரேனின் ‘நகரகாசூரன்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இறுதிக்கட்ட படப்பிடிப்பு; ஜெய்ப்பூர் செல்லும் மணிரத்னம் !

News Editor

“விவசாயிகள் ஏர்முனை கடவுள்”; இணையத்தில் வைரலாகும் ஜி.வி பிரகாஷ் ட்வீட் !

News Editor

பிங்க் லெஹங்கா.. பச்சை Net தாவணியில் மின்னும் தமன்னா

News Editor